இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான போட்டியில் இந்தியா வென்றது ஒருபக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மறுபக்கம் ஹாங்காங் வீரர் செய்த செயல் பார்க்கும் பலரையும் ரசிக்கும் படி செய்துள்ளது. ஹாங்காங் வீரர் கின்சித் போட்டி முடிந்ததும் அவரது காதலிக்கு மைதானத்தில் ப்ரொபோஸ் செய்தார். அவரின் செயல் தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் செம வைரலாக மாறி வருகின்றது.
26 வயதான அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இருந்தும் 18-வது ஓவரில் அவர் அவுட்டனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அவர் ஹாங்காங் அணிக்காக 43 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 633 ரன்கள் எடுத்துள்ளார். அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த 2019 வாக்கில் 79 ரன்கள் சேர்த்திருந்தார். அது டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அவரது அதிகபட்ச ரன்களாக உள்ளது. 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் அணி இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நிலையில் மைதானத்தில் இருந்த தனது தோழியிடம் காதலை கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார்.
டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வெளிவரும் கின்சித், தனது தோழியிடம் சென்று பாக்கெட்டில் உள்ள மோதிரத்தை எடுத்து, அவருக்கு முன்னாள் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்துகிறார். சில நொடிகள் தாமதித்தாலும் அவரது தோழி காதலை ஏற்றுக் கொண்டார்.இந்நிலையில் தற்போது இந்த விஷயம் தான் சமூகத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது.
mesmerizing moment!👇💝
— Anveshka Das (@AnveshkaD) September 1, 2022
Hong Kong's 26 yr-old batting all-rounder Kinchit Shah proposed to her girlfriend right after the match against #India.#INDvHKG #INDvHK #KinchitShah #AsiaCup2022 pic.twitter.com/3T4J8kXSjn