Skygain News

கேரளாவில் மாணவர்களுக்கு நடந்த கோர சம்பவம்: கடும் நிபந்தனைகளை விதித்த கேரள அரசு..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்த முளங்குருத்தி பாசலியஸ் வித்யா நிகேதன் பள்ளியிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 43 பேர் உள்பட 51 பேர் ஊட்டிக்கு தனியார் பேருந்தில் இவர்கள் சுற்றுலா சென்றுள்ளார்.

பாலக்காடு வடக்காஞ்சேரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது தனியார் பேருந்து வேகமாக மோதியுள்ளது. இதில் சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்தது.

பேருந்து கவிழ்ந்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே 9 மாணவ, மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியினர் வந்து மீட்டு அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். பத்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 41 பேருக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உதகைக்கு சுற்றுலா புறப்பட்டபோது பாலக்காடு அருகே நிகழ்ந்த விபத்தில் ஒன்பது பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததை அடுத்து கேரளா அரசு அதிரடி நடவடிக்கை மற்றும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.

மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல சுற்றுலாத்துறை அங்கீகரித்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யக்கூடாது. பயண விபரங்களை தலைமையாசிரியர் அறிந்திருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.