அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
தனிமைப்படுத்தலில் இருந்தபடியே தனது அனைத்து பணிகளையும் ஜோ பைடன் மேற்கொள்வார் எனவும் வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்திருந்தது . இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறேன்,ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர பல உலக தலைவர்களும் நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்