பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மற்றும் விவசாயத்துறை அமைச்சராக சேர்ந்தவர் சுதாகர் சிங். இவர் கைமூரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது விவசாய துறையில் திருட்டு செயல்களில் ஈடுபடாத ஒரு பிரிவு கூட கிடையாது. நான் அந்த அமைச்சகத்தின் பொறுப்பாளராக இருப்பதால் அவர்களுக்கு எல்லாம் நான் தலைவனாக இருக்கின்றேன். எனக்கும் மேலே பல திருடர்கள் உள்ளார்கள் என்று பேசி அப்பகுதியில் மிக பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், அரசு மாறினாலும் வேலை செய்யும் முறை மட்டும் மாறவே இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மாநிலத்தில் தரமான நெல் உற்பத்தி செய்த விவசாயிகள் மாநிலம் விதைக்கழகம் வழங்கிய விதை நெல்லை வாங்கவில்லை. ஒரு சில காரணங்களுக்காக வாங்கிய சில விவசாயிகளும் அதனை பயிரிடவில்லை. விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்காமல் விதை நெல் கழகம் 100 ரூபாய் முதல் 150 கோடி வரை கொள்ளை அடித்திருக்கிறது என்று கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சு பீகார் மாநில அரசியலில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.