உத்திரமேரூர் அருகே களியாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த ஆண் குழந்தை பேசியதாக பரவிய தகவலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த உடன் திடீரென நான் வந்துட்டேன் என பேசி உள்ளது. குழந்தை பேசியது மருத்துவர், மற்றும் செவிலியர், தூய்மை பணியாளர் தாயின் உறவினர் உள்ளிட்ட அனைவருக்கும் கேட்டுள்ளது. குழந்தை பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
புராண காலத்தில் தாயின் வயிற்றில் கர்ப்பத்தின் போது கதைகளை கேட்டு செயல் பட்ட பிரகலாதன், மற்றும் அபிமன்யுவை போல நவீன காலத்தில் குழந்தை பேசியுள்ளது புராண காலத்தை நினைவுப்படுத்தி உள்ளது