Skygain News

நமக்கு தெரியாத நன்மைகளை கொடுக்கும் ஐஸ் பிரியாணி..!

இன்றைய காலகட்டத்திலும் மருத்துவமனைக்கூட செல்லாத முதியோர்கள் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவுகள் தான் காரணம். உணவுகளில் மிக ஆரோகியமான உணவு பழைய சோறு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதை பற்றி எதுவும் தெரியாது ,பிஸ்ஸா ,பர்கர் என்று சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர் ,அதுவும் பழைய சோரிலிருந்து வரும் நீராகாரம் உடலுக்கு நிறைய நன்மைகள் தர கூடியது. வயிற்று புண் முதல் உடல் உஷ்ணம் வரை குறைத்து நம்மை பாதுகாக்கும் ,மேலும் நிரைய இரும்பு சத்து அடங்கியுள்ளது.

பழைய சாதத்தால் நாள் முழுவதும் சோர்வு வராமல் நம்மால் வேலை செய்ய முடிகிறது. பழைய சாதத்தில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கலை நீக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல் எடை குறைப்பதிலும் பெருமளவு துணை புரிந்து நம் ஆரோக்கியத்தை சரி செய்கிறது .

பழைய சாதம் சாப்பிடுவதால் உடலை சீராக இயங்க செய்து உள்ளிருந்து சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறது.

பழைய சாதம் சாப்பிடுவதால் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதை விரட்டி ஓட வைக்கிறது.

எனவே தினமும் காலையில் பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளும், தோல் தொடர்பான பிரச்சனைகளும் எந்த ஜென்மத்திலும் வருவதில்லை. அது மட்டும் அல்லாமல் உடல் எப்பொழுதுமே குளிர்ச்சி தன்மையுடன், உஷ்ணம் இன்றி எப்போதும் ஆக்டிவாக இயங்க வைக்கிறது. இவ்வளவு விஷயங்களையும் நமக்கு அள்ளிக் கொடுக்கும் இந்த பழைய சாதத்தை இனியாவது நாம் சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழ்வோம் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More