கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சராணா பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் : ஒற்றுகை பயணம் என கூறி தற்போது ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்கு நுழைந்ததும் நாராயண குரு மண்ணில் கால் பதிப்பதாக கூறியுள்ளார். அவர் பெயரை அங்கு கூறாவிட்டால் கேரளாவில் கால் வைக்க முடியாது என அவருக்கு தெரியும். கன்னியாகுமரி அருகே நரி குளத்திலுள்ள பாலத்தை 2019-ல் பிரதமர் மோடி திறந்து வைத்த கல்வெட்டை சேதப்படுத்தியுள்ளனர். பிரதமர் படத்தை சேதப்படுத்திய காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தவறினால் தமிழக பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்படும். பாதயாத்திரையின் போது கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற முயற்சிகளை காங்கிரசார் மேற்கொண்டுள்ளனர். இந்த பாதயாத்திரை ஒற்றுமைக்கான பயணம் அல்ல. கலவரத்தை உண்டாகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடை பயணம். இதன்மூலம் ராகுல் சில விதைகளை விதைத்து சென்றுள்ளார். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
