தமிழகத்தில் ஹிந்தி திணித்தால் தமிழ் அழிந்து விடுவது மட்டுமல்லாமல் நமக்கு நாமே அடிமையாகி விடுவோம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளரும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏவுமான புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தி.மு.க., துணை பொதுச்செயலாளரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :
வரும் 27 ம் தேதி இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ.,வின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஹிந்தி திணிப்பை கண்டித்து, துண்டறிக்கையை பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்க
வேண்டும் எனவும் தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்பட்டால் தமிழ் அழிந்து விடுவது மட்டுமல்லாமல் நமக்கு நாமே அடிமையாகி விடுவோம் வேலைவாய்ப்பு கிடைக்காது என எதுவும் கிடைக்காது என தெரிவித்தார். இந்தி திணிப்பு குறித்து இளைஞர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என கூறினார்