Skygain News

ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த இந்திரா காந்தி நினைவையொட்டி அஞ்சலி செலுத்தினர்..!

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மண்டல தலைவர் விஜயபாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன் கலந்துகொண்டு, இந்திரா காந்தி உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்ஷத் பயங்கரவாத உறுதிமொழி படிக்க, அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம்.ஜவஹர் அலி, காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாபு என்கிற வெங்கடாஜலம், எம்ஆர் அரவிந்த தாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் பி. ஆறுமுகம், முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், சிறுபான்மை துறை துணைத் தலைவர் கேஎன் பாஷா, சூர்யா சித்திக், நிர்வாகிகள் டிட்டோ, ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், சதீஷ், விஜயகுமார், தங்கவேலு, நடராஜ் செட்டியார், சிவாஜி கணேசன், வேன் ராமசாமி, என்.சி.டபிள்யூ.சி கிருஷ்ணவேணி, எம்.பேபி உட்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More