தஞ்சை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தஞ்சை நகரில் உள்ள சுமார் 20 பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவ , மாணவிகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை கூற ஆட்சியரை பின்பற்றி மாணவர்கள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோரும் உறுதிமொழி எடுத்தனர்.
