Skygain News

தஞ்சையில் ஆறுப்போல் பெருக்கெடுத்த மழைநீர் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்…

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆங்காங்கே தேங்கும் நீரால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சையில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் வடக்கு வீதி, ராஜகோபால் சாமி கோவில்தெரு மேலவீதி. அய்யங் கடைதெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே வாகனத்தை ஓட்டும் நிலை இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே பிரசித்திப் பெற்ற ராஜகோபால் சாமி கோவிலை மழைநீர் சூழ்ந்தது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More