இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது .
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 21,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 21,880 பேருக்கும் நேற்று முன் தினம், 21,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,825,185 ஆக உள்ளது. ஒரேநாளில் 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5,25,997 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 20,726 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 31, 92, 379 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 1,50,100 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 34,93,209 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 201.68 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.25% ஆகவு பதிவாகியுள்ளது.