Skygain News

ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை திறந்து வைத்த முதலமைச்சர் M.K. ஸ்டாலின்..!

முதல்வர் ஸ்டாலின் மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். அங்கு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

பின் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூருக்கு சென்றார் முதலமைச்சர், அங்கு சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று, மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்றடைகிறார். அங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More