ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை ஐந்து முப்பது மணியளவில் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. நாளை 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரைக்கும் பக்தர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்பட இருக்கிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். முன்பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசனம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.

மாலை ஐந்து முப்பது மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். அதன் பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். அதன் பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும்.

அதன்பின் ஏழு முப்பது மணிக்கு பின்னர் புதிய மேல் சாந்தி தேர்வுக்கான குழுக்கள் தேர்வு நடைபெறும் . திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல் சாந்திக்கு தகுதி பெற்று இருக்கும் 10 பேரில் ஒருவரும், மாளிகை புறம் மேல் சாந்திக்கு தகுதி பெற்று இருக்கும் எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் ஒரு ஆண்டு காலம் சபரிமலையில் தங்கிய பூஜை செய்வார்கள்.