பிபிசி செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஊழியர்களுடைய செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக, அந்நிறுவனத்தின் செய்தி செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், தாங்கள் வருமானவரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
