இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.இந்தப் போட்டியில் ரோகித், கோலி, ராகுல் உள்ளிட்ட பல்வேறு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், டி20 உலககோப்பையில் பங்கேற்பதற்காக முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர்.இதனையடுத்து, ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார்.
முதல் போட்டி வியாழக்கிழமை லக்னோவிலும், 2வது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை ராஞ்சியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் செவ்வாய்கிழமை டெல்லியிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், சாம்சன், ருதுராஜ், கில் என பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடப்பெற்றுள்ளதால் இப்போட்டி ரசிங்கர்கள் மத்தியில் கவனத்தை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது