இந்திய அணி T20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. கடந்த வாரமே இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகின்றது. அதன் படி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடனான 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார்.ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆர்ஸ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளே முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் ஹாப்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
டார்சி சார்ட் தன் பங்கிற்கு அரைசதம் விளாச சிறப்பாக விளையாடிய ஹாப்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 ஓவர் முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.இந்நிலையில் வெஸ்ட்ர்ன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஸ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இந்நிலையில் இலக்கை துரத்திய இந்திய அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது.ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், நிதானமாக விளையாடும் நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டார். 45 பந்துகளில் தான் ராகுல் அரைசதம் கடந்தார்.
That's that from the practice match against Western Australia.
— BCCI (@BCCI) October 13, 2022
They win by 36 runs.
KL Rahul 74 (55) pic.twitter.com/5bunUUqZiH
அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக்கும் 10 ரன்களில் வெளியற, ராகுல் அதிரடியை காட்டி தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார். ராகுல் 55 பந்துகளில் 74 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.