இந்தியா நடப்பாண்டின் T20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் T20 தொடரில் விளையாடவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் T20 உலககோப்பைக்கு தயாராகும் இந்திய அணிக்கு இந்த தொடர் அவர்களை தயார்படுத்திக்கொள்ள மிகவும் உதவும். இந்நிலையில் இன்று நடக்கும் இப்போட்டியில் இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் யார் யார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இந்திய அணியில் பேட்டிங் வரிசை சிறப்பாக இருக்கிறது. பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகிய பௌலர்கள் அணிக்கு திரும்பிவிட்டதால், பந்துவீச்சு துறையும் பிரச்சினை இல்லை. இருப்பினும், பிளேயிங் லெவன்தான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. காரணம் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர்தான்.

கடந்த ஆசியக் கோப்பையில் ஜடேஜா இல்லாததால் இடது கை வீரர் என்ற அடிப்படையில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவர் தனது திறமையை நிரூபிக்கவில்லை.தற்போது ஜடேஜாவுக்கு மாற்றாக இடது கை ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் வந்துவிட்டார்.
இதனால், தினேஷ் கார்த்திக்கிற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. எனவே இப்போட்டியில் பந்தை விட தினேஷ் கார்த்திக்கு தான் முன்னுரை வழங்கப்படும் என்று தெரிகின்றது குறிப்பிடத்தக்கது