டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது 4வது லீக் போட்டியாக வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள இன்று வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.போட்டி நடைபெறும் அடிலெய்ட் நகரத்தில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது.
இதே போல போட்டி நடைபெறும் நாளன்றும் மழைக்கு அதிக வாய்ப்புள்ளதால், போட்டி ரத்து செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு சிக்கலாகும் என்பதால் ரசிகர்கள் பதற்றத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு நற்செய்தி கிடைத்துள்ளது. அதாவது அடிலெய்டில் திடீரென காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் நேற்று இரவு முதல் எந்தவித மழைப்பொழிவும் இல்லாமல் உள்ளது. இன்றும் மழைபொழிவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.