இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டுள்ளது. ஷாகின் ஆப்ரிடி போன்ற இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஏதுவாக, இன்று ரோகித் சர்மா உள்ளிட்டோர் டிரெண்ட் பவுல்ட் பந்துவீச்சை எதிர்கொண்டது தங்களை தயார்ப்படுத்தி கொள்வார்கள் என கணிக்கப்பட்டது.
ஆனால் அனைத்து திட்டத்திற்கும் மழை முட்டுக்கட்டையாக வந்து விழுந்தது. மேலும் மெல்போர்ன் சுற்றி உள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் 23ஆம் தேதி அன்று மெல்போர்னில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Match at The Gabba has been called off due to persistent rains. pic.twitter.com/pWSOSNBWz1
— BCCI (@BCCI) October 19, 2022
இதனால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.பல நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆணிகள் உலகக்கோப்பையில் மோதுவதை கானா அவளாக இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது