நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. வெல்லிங்டன் மைதானத்தில் மதியம் 12 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், முகமது ஷமி, போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில் உள்ளனர். இதனால் ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இந்தியாவின் எதிர்கால அணி விளையாடவுள்ளது. மறுபுறம் நியூசிலாந்து தனது முழு பலத்துடன் களமிறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
🚨 UPDATE from Wellington 🚨
— BCCI (@BCCI) November 18, 2022
Both captains shake hands as the first #NZvIND T20I is called off due to persistent rain.#TeamIndia pic.twitter.com/MxqEvzw3OD
எனவே விறுவிறுப்பாக இந்த ஆட்டமமையும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இதையடுத்து அடுத்த போட்டி வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற இருக்கின்றது