இந்தியா தற்போது T20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதியன்று எதிர்கொள்ளவுள்ளது.
உலகமே எதிர்பார்க்கும் இப்போட்டி தற்போது ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.அதாவது ஆஸ்திரேலியாவில் திடீரென வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் அக்டோபர் 23ம் தேதி தான் நல்ல பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது 95% சதவீதம் அளவிற்கு மழை பொழிவுக்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதுவும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் கனமழையையே எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.