T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் சில தினங்களில் துவங்கவுள்ளது.இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.இந்நிலையில் போட்டி நடைபெறும் சமயங்களில் நிச்சயம் மழை பெய்யும் என ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் லீக் போட்டி நடைபெறவுள்ள மெல்போர்ன் மைதானத்தில் மழைபெய்ய 80% வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அன்றைய தினம் போட்டி நடைபெற வாய்ப்பு மிகமிக குறைவு எனக் கருதப்படுகிறது.

இத்தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலர் தங்களது அதிருப்திகளையும், ஏமாற்றங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.