Skygain News

தொடரை வெல்லுமா இந்தியா ? இன்று கடைசி ஒருநாள் போட்டி..!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகின்றது. முதல் இரண்டு ஆட்டங்களில் முறையே இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா வென்றுள்ளதால் இன்று நடக்கும் கடைசி போட்டி தான் தொடரை தீர்மானிக்கும் போட்டியாகும்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததால் அதற்கு பதிலடியாக ஒரு நாள் போட்டி கோப்பையை வென்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளனர். உடல்நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா, இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

முழங்கை காயத்தில் இருந்து மீண்ட பிறகு 4 இன்னிங்சில் 11 ரன் மட்டுமே எடுத்துள்ள அவர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக பார்முக்கு திரும்புவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.இந்நிலையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More