இந்திய மன்னிப்பில் இதுவரை தென்னாபிரிக்கா அணி T20 தொடரை இழந்ததில்லை. உலகில் உள்ள அனைத்து அணிகளுடனும் கெத்து காட்டும் இந்திய அணி இந்திய மன்னிப்பில் தொடர்ந்து தென்னாப்ரிக்காவுடன் சொதப்புவது சற்று கவலையை அளித்துள்ளது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.
இரு அணிகளும் 20 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில் அதில் இந்தியா 11 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 8 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஒரு போட்டி டிரா.இந்தியாவில் நடைபெற்ற டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி 5 முறையும், இந்தியா 3 முறை மட்டுமே வென்றுள்ளது.

இப்படி ஆதிக்கம் செலுத்தியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் இந்திய அணியில் இத்தொடரில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கிய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு இத்தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.