மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து முதல் டி20 போட்டி கடந்த 29ம் தேதி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது அதில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் தற்போது சமநிலையில் உள்ளது
இந்நிலையில், மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு அதே மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி அடைந்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதேபோல் கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது .
இதில் இன்று எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியடைய போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம் .