டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 காம்போ நன்றாகவே செட்டாகியிருந்தது. ஆனால் இந்த முக்கியப்போட்டியில் மாற்றத்தை செய்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
அதில் முதலிடத்தை பிடிப்பது தினேஷ் கார்த்திக் – ரிஷப் பண்ட் போட்டி தான். இதில் மீண்டும் பண்ட்-ஐ களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் ணியில் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் சேர்க்கப்படவுள்ளதாக தெரிகிறது. அக்ஷர் பட்டேல் ஒரு பேட்ஸ்மேனாகவும் உதவுவார் என்று தான் நினைத்தனர்.
ஆனால் 4 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்களை தான் எடுத்துள்ளார். பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடிலெய்டில் லெக் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதால் சாஹல் கொண்டு வரப்படலாம் என தெரிவது குறிப்பிடத்தக்கது