Skygain News

கொட்டும் மழையில் விடுதலை தினவிழா கொண்டாட்டம் : தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி…

பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் 180 ஆண்டுகள் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கீழூரில் நடந்த வாக்கெடுப்பில் புதுச்சேரியில் அப்போது இருந்த உள்ளாட்சிப்பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் இணைய வேண்டும் என வாக்களித்து நவ.1, 1954ல் பிரஞ்சு நாட்டின் அரசு புதுச்சேரிக்கு விடுதலையளித்துள்ளது இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு கொண்டாடி வருகின்றது.

அந்த வகையில் இன்று விடுதலை தினவிழா மாநிலம் முழுவதும் கோலாகளமாக கொண்டாடி வருகின்றனர். கொட்டும் மழையில் புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றிவைத்து கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அணிவகுத்து வந்த காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத்தொ கொட்டும் மழையிலே பல்வேறு மாநில கலைஞர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்ட அரசு மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த விடுதலை நாள் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி இந்து திருமணங்களை பதிவு செய்வதில் ஏற்படும் தாமதங்களை போக்கும் வகைவகையில் அதில் திருத்தம் செய்து திருமண நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை துணைப்பதிவாளர் பதிவு செய்யவும் 15 ஆண்டுகளுக்கு மேல் திருமண நாளில் இருந்து 40 ஆண்டுகள் வரை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ரங்கசாமி பேரிடர் காலங்களில் அரசின் மீட்புக்குழு வரும் வரை தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதற்காக 145 சமூக தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரி மாநில கடற்பரப்புகள் கடலரிப்பின் காரணமாக புதுச்சேரியின் கடலோரக்குடியிருப்புகள் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரி பகுதிகளுக்கிடையே தமிழக பகுதிகளும் இடையிடையே வருவதால் முழுமையான அறிவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளுமாறு தேசிய கடலோர ஆய்வு மையத்தை புதுச்சேரி அரச வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்த ரங்கசாமி, புதுச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று இந்த விழா மூலமாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்,” என்று முதல்வர் ரங்கசாமி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More