இந்திய அணி என்னதான் இந்த ஆசிய கிரிக்கெட் கோப்பையை வெற்றிகரமாக துவங்கினாலும் தற்போது தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணி கிட்டத்தட்ட ஆசிய கோப்பையை விட்டு வெளியேறும் அபாயம் இருக்கின்றது. நேற்று இந்தியா இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்தியா இத்தொடரை விட்டு வெளியேறிவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில் ,நாங்கள் தவறான சூழலில் சிக்கி கொண்டு விட்டோம். நாங்கள் எங்கள் பேட்டிங்கில் விளையாடும் போது நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால் அதனை சிறப்பாக பயன்படுத்தி முடிக்கவில்லை. ஒரு 10 அல்லது 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.ஆட்டத்தின் 2வது பகுதி எங்களுக்கு சிறப்பானமாக அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் எப்படி ஷாட் ஆடி ரன்களை குவிக்க வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்.
கிரிக்கெட்டில் இப்படி எல்லாம் நடக்கத் தான் செய்யும். இது போன்ற தோல்விகள் ஒரு அணியாக எப்படி செயல்பட வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்தும். பந்துவீச்சை பொறுத்தவரை, இலங்கை அணியினர் இவ்வளவு நல்ல தொடக்கத்தை பெற்ற பிறகும், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றோம்.
டி20 உவகக் கோப்பைக்கு பிறகு நாங்கள் சில போட்டிகளில் தான் தோற்று இருக்கிறோம். இதனால் அச்சமும், கவலையும் படத்தேவையில்லை. புவனேஸ்வர் குமார் எங்களுக்காக பல போட்டிகளை வென்று தந்து இருக்கிறார். இந்தப் போட்டிகளை வைத்து அவரை எடைப் போடக்கூடாது.இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது குறிப்பித்தக்கது