ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது.டாஸ் வென்ற தேன்கலந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாகவே ஆடினார்கள்.ரோஹித் மற்றும் ராகுல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.சிறப்பாக ஆடிய கோலி அரைசதத்தை கடந்து ஆட்டமிழந்தார்.
#TeamIndia put up a fight but it was England who won the match.
— BCCI (@BCCI) November 10, 2022
We had a solid run till the semifinal & enjoyed a solid support from the fans.
Scorecard ▶️ https://t.co/5t1NQ2iUeJ #T20WorldCup | #INDvENG pic.twitter.com/5qPAiu8LcL
பின்பு கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டிய ஹார்டிகா பாண்டியா 63 ரன்களை சேர்க்க இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்களை சேர்த்து.இதையடுத்து 169 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி சர்வசாதாரணமாக இந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது.ஒரு விக்கெட் கூட இழக்காமல் இந்த போட்டியை இங்கிலாந்து அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நவம்பர் 13 ஆம் தேதி நடக்கவுள்ளது