Skygain News

அரை இறுதிக்கு செல்ல இந்தியா செய்யவேண்டியது இதுதான்..ரசிகர்கள் பிரார்த்தனை..!

இந்திய அணி நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியுடன் தோல்வியை சந்தித்தது.இதன் மூலம் இந்திய வாழ்வா சாவா கட்டத்தை எட்டியுள்ளது. இனி எஞ்சிய போட்டிகளான பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாவே அணியுடனான போட்டியில் இந்திய அணி வென்றே ஆகவேண்டும்.

அப்படி இல்லை என்றால் அரா இறுதி வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்படும்.இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துவிட்டது. இந்தியா 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ரன்ரேட்டில் குறைந்துள்ள வங்கதேச அணியும் அதே 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

இந்தியா தோற்றதால் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பும் உயிர் பெற்றுள்ளது.இந்திய அணிக்கு அடுத்ததாக வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடன் போட்டி உள்ளது. இதில் இரண்டிலும் வெற்றி கண்டால் 2வது இடத்தை நிச்சயம் பிடித்துவிடலாம்.

ஒருவேளை வங்கதேசத்துடன் தோற்றுவிட்டால், இந்தியா 3வது இடத்திற்கும், அந்த அணி 6 புள்ளியுடன் 2வது இடத்திற்கும் சென்றுவிடும். பின்னர் வங்கதேசம், தனது கடைசி போட்டியான பாகிஸ்தானுடன் தோற்ற வேண்டும் என இந்திய வீரர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டி வரலாம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More