இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் படுதோல்வியை தழுவியது.இந்திய அணியின் செயல்பாடு ரசிகர்களை ஆத்திரம் அடைய செய்துள்ளது.
இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, இந்திய அணியின் செயல்பாடு அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இங்கிலாந்திடம் சண்டையிடாமல் இந்திய அணி சரண்டர் ஆகி விட்டதாக ரவி சாஸ்திரி சாடியுள்ளார்.
அனைத்திலும் இந்திய அணியை விட இங்கிலாந்து பல மடங்கு சிறப்பாக செயல்பட்டதாக கூறிய ரவி சாஸ்திரி டி20 கிரிக்கெட்டில் புதிய இந்திய அணி தேர்வு செய்ய பிசிசிஐ நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.

ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் பல சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விளையாட வேண்டுமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்