கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் அடிக்காதது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அந்த வருத்தத்தை நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து போக்கினார் கோலி. என்னதான் இந்திய அணி ஆசிய தொடரில் இருந்து வெளியேறினாலும் கோலி அடித்த சதம் காரணமாக உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள் இருக்கின்றனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 212/2 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 111/8 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோஹ்லி ஆட்டநாயன் விருதை தட்டி சென்றார்.
அதன் பிறகு பேசிய கோலி, என் மனைவி அனுஷ்கா சர்மா தான் என்னை சரியான பாதையில் வழிநடத்தினார். இன்றைய சதத்திற்கான ஒரு முன்னோட்டங்கள் தான் கடந்த போட்டிகளில் வந்த அரைசதங்கள். 60 ரன்களுக்கு மேல் அடித்த பிறகு சில முறை விக்கெட்டாகாமல் நான் தப்பித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதற்கெல்லாம் கடவுளின் ஆசீர்வாதமே காரணம் என நான் நம்புகிறேன்.
Thank you for all the love and support throughout the Asia Cup campaign. We will get better and come back stronger. Untill next time ❤️🇮🇳 pic.twitter.com/yASQ5SbsHl
— Virat Kohli (@imVkohli) September 9, 2022
கடவுளின் ஆசியால் தான் தப்பித்தேன் என்பதை கூற எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. ஏனென்றால் அவரால் தான் நான் இங்கு நிற்கிறேன் என்றார் கோலி. இந்நிலையில் கோலி இந்த ஆசிய தொடரில் தன் பழைய ஆட்டத்தை காட்டியதால் உலகக்கோப்பை T20 தொடரிலும் அது தொடரும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது