இந்தியா மற்றும் தென்னாப்ரிக்காவிற்கு இடையேயான T20 தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில் இப்போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தபடியே நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்-ம் வெளியேற்றப்பட்டிருந்தார். அவருக்கும் முதுகுவலி பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது.
டாஸின் போது, இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு சிறியதாக முதுகு வலி ஏற்பட்டுள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார். எனவே இதையடுத்து ரசிகர்கள் மேலும் ஒரு வீரருக்கு காயம என்ற அச்சத்தில் இருக்கின்றனர்