இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியுள்ளார்.இந்நிலையில், ரோஹித் ஷர்மாவுக்கான மாற்று வீரர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த மாற்று வீரர் அபிமன்யு ஈஸ்வரன்தான். தற்போது வங்கதேசதம் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய ஏ அணிக்கு இவர்தான் கேப்டனாக இருக்கிறார். மேலும், அபாரமாக விளையாடி இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களை குவித்திருக்கிறார்.

முதல் டெஸ்டிலும் 142 ரன்களை அடித்திருந்தார்.இந்நிலையில் ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து ஷமியும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு மாற்றாக, வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்களை கைப்பற்றிய முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.