இந்தியா தற்போது நடந்துவரும் T20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து வரும் வியாழக்கிழமை அடிலெய்டு மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது இந்தியா.இந்நிலையில் இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில் ,தற்போது எங்களுடைய கவனம் எல்லாம் அரையிறுதி போட்டி மீது உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் சவாலாக இருக்கும். அடிலெய்ட்டில் அந்தப் போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே நாங்கள் அங்கு விளையாடி இருப்பதால் களத்தின் சூழல் எங்களுக்கு தெரியும். இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி நிச்சயம் சிறப்பானதாக அமையும்.
For his breathtaking batting pyrotechnics, @surya_14kumar bagged the Player of the Match award as #TeamIndia beat Zimbabwe by 7⃣1⃣ runs at the MCG👏 👏
— BCCI (@BCCI) November 6, 2022
Scorecard 👉 https://t.co/shiBY8Kmge #T20WorldCup | #INDvZIM pic.twitter.com/k236XjavDv
அரை இறுதிக்கு சென்று விட்டோம் என்று தெரிந்தும் எங்களுக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் போட்டியை நேரில் வந்து பார்த்தது ஆச்சரியம் அளிக்கிறது. அரையிறுதியிலும் இதே போன்ற ஆதரவை ரசிகர்கள் எங்களுக்கு கொடுப்பார்கள் என நம்புகிறேன்