தற்போது நடைபெறும் வரும் ஆசிய கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் கனவு தகர்க்கப்பட்டது.
தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான போட்டியில் தோல்வியை சந்தித்து இந்திய அணி வெளியேறியுள்ளது. அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதே தோல்விக்கான காரணம் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பொதுவாகவே சமீப காலமாக, முக்கியத்துவம் இல்லாத போட்டிகளில் சீனியர் வீரர்கள் கலந்துகொள்வது கிடையாது.
இதனால், இன்றும் அவர்கள் ஓய்வுக்கு சென்றுவிட்டு அக்சர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், அஸ்வின் போன்றவர்களை விளையாட வைப்பார்களா அல்லது ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்க பலமிக்க அணியாகவே விளையாடுவார்களா என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை மாற்றம் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.