இந்திய அணி நேற்று T20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது. ஏறத்தாழ ஜடேஜாவை தவிர மற்ற வீரர்கள் எல்லாம் எதிர்பார்த்தது போலவே தான் இருந்தது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சில விமர்சனங்களை வைத்த வண்ணம் இருக்கின்றனர். ஏன் சஞ்சு சாம்சன் இல்லை, இஷான் கிஷன் இல்லை என கேட்டு வருகின்றனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஷமியை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
எனவே இதற்கெல்லாம் இந்திய அணி கோப்பையை வெல்வதே ஒரே பதில் ஆகும். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டிக்காக புத்தம் புதிய ஜெர்சியை பயன்படுத்த பிசிசியை திட்டமிட்டுள்ளது. அதன்படி டி20 உலக கோப்பையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் லைட் ப்ளூ கலரை இந்திய அணி பயன்படுத்தியது.
தற்போதைய உலகக் கோப்பை தொடருக்கு அதனை நினைவு கூறும் விதமாக வான நீல நிறத்தில் ஜெர்சியை மாற்ற பிசிசிஐ யை முடிவெடுத்துள்ளது. கையில் மற்றும் கழுத்தில் இந்திய கொடியின் டிசைன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஜெர்சிக்கான ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது .
அதில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஜெர்சிக்கு மேல் ஜெர்க்கின் களை அணிந்து ரசிகர்கள் முன் தோன்றுகின்றன.இந்நிலையில் இந்திய ரசிகர்கள் பலர் 2007 ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது அணிந்திருந்த ஜெர்சியை ராசிக்காக இந்திய அணி தற்போது அணியவுள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Promo for the New Jersey launch of Indian team ahead of the T20 WC.pic.twitter.com/KH2ncrYuuW
— Johns. (@CricCrazyJohns) September 13, 2022