இந்தாண்டு T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. இதற்கு தயாராகும் முனைப்பில் தான் கடந்த ஓராண்டாக இந்திய அணி செயல்பட்டு வருகின்றது. இந்தியா ஐ.சி.சி கோப்பை கைப்பற்றி பல வருடங்கள் ஆனதால் இந்த உலகக்கோப்பையை வென்றாகவேண்டும் என்று கங்கணம் காட்டியுள்ளது இந்திய அணி.
எனவே அதற்கான சரியான பதினைந்து வீரர்களை தேர்வு செய்யும் தீவிரத்தில் இந்திய அணி உள்ளது. கிட்டத்தட்ட 13 வீரர்கள் முடிவான நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே குழப்பம் நீடிக்கின்றது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஏற்பாடுகளும் தற்போது சூடுபிடித்துள்ளது. அனைத்து நாடுகளும் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதனால் சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய தேர்வுக்குழு, தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்திய அணியை பொறுத்தவரையில் 13 வீரர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை அணியை வைத்தே, தேர்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் உள்ளனர். கே.எல்.ராகுல் ஃபார்மில் இல்லை என்றாலும், அவர் தயாராகிவிடுவார் என நம்பிக்கை வைத்துள்ளனர். மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி வருவதால், இந்தியாவுக்கு கூடுதல் பலம் வந்துள்ளது.
லோயர் ஆர்டரை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டுள்ளனர்.பந்துவீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள் யுவேந்திர சாஹல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அகிய இருவரும் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த தீபக் சஹார், அடுத்து வரக்கூடிய ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க தொடரில் ஃபார்முக்கு வந்துவிடுவார் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தல் இதுதான் டீமாக இருக்கும்..
ரோஹித் சர்மா, ராகுல், கோஹ்லி, சூரியகுமார், பந்த்/கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப், சாஹல்