இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடனான T 20 தொடரில் விளையாடி தொடரை வென்றுள்ளது. ஆனால் இத்தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இந்திய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் தீபக் ஹூடாவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்படும் தீபக் ஹுடாவுக்கு, சுழற்பந்தவீச்சும் வீச தெரியும். சொல்லப் போனால், தற்போது அணியில் இருக்கும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனில் இவருக்கு மட்டும் தான் சுழற்பந்துவீச தெரியும்.

இதனால், தீபக் ஹூடாவை, ரிஷப் பண்ட்க்கு பதிலாக சேர்த்தால், இந்தியாவுக்கு ஒரு பந்துவீச்சாளரும், ஒரு பேட்ஸ்மேனும் கூடுதலாக கிடைக்கும் என்று அனைவரும் கருதினர். ஜடேஜா இல்லாத நிலையில், தீபக் ஹூடா இந்திய அணிக்கு நல்ல ஆல்ரவுண்டராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது