இந்திய அணியின் மீது ரசிகர்கள் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். தவறான டீம் செலக்ஷன், தேவையில்லாத மாற்றங்கள் என இந்திய அணி இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகின்றது. அதன் விளைவாக தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி.
நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. மேலும் இந்திய விக்கெட் கீப்பர் பந்த் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றார். இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரென்கள் தேவைப்பட்டது. அப்போது ஆர்ஷ்தீப் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது, அது விக்கெட் கீப்பரிடம் பிடிப்பட்டது. அந்த பந்தை ரிஷப் பண்ட் ரன் அவுட் செய்யும் வகையில் ஸ்டம்பை நோக்கி எறிந்தார்.
ஆனால் அது ஸ்டம்பில் படாமல், பந்துவீச்சாளரிடம் சென்றது. ஆர்ஸ்தீப்பும் ரன் அவுட் செய்ய முயல, அது ஓவர் த்ரோவாக இலங்கை வீரர்கள் 2 ரன்களை சுலபமாக ஓடி ஒரு பந்து எஞ்சிய நிலையில் வென்றனர்.இந்த நிலையில், எப்போதுமே விக்கெட் கீப்பர் தனது சிறிய புத்தாசாலித்தனம் மூலம் ஆட்டத்தின் முடிவில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். அப்படி ஒரு மாற்றத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி செய்வார்.
2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான வாழ்வா சவாவா ஆட்டத்தில் இப்படி ஒரு காரியத்தை தான் தோனி செய்வார்.இதே போன்ற சூழலில் தோனி பந்தை எறியமால் வேகமாக ஓடி வந்து ரன் அவுட் செய்துவிடுவார். அதற்கு காரணம், கையுறை அணிந்து பந்தை எறியும் போது 10 க்கு 9 முறை, அது ஸ்டம்பை அடிக்காது.
ஆனால் ஓடி வந்த ரன் அவுட் செய்து இருந்தால், நிச்சயம் அட்டமிழக்க வைக்கலாம். தோனியின் ஒரு புத்திசாலித்தனம், அன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்தது.இதையடுத்து தோனி இருந்திருந்தால் இந்திய அணி வென்றிருக்கும் என்று ரசிகர்கள் ஆதங்கப்படுவது குறிப்பிடத்தக்கது