மேலும் படிக்க 15-வது ஆசிய கோப்பை நாளை முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், குவைத் ஆகிய 6 அணிகள் போட்டி போட உள்ளன. ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பலபரீட்ச்சை நடத்துகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் இந்த தொடரில் விலகியுள்ளது உண்மையாகவே பாகிஸ்தானுக்கு பின்னடைவாகும். இருப்பினும் அவரது அனுபவம் இதர பந்துவீச்சாளர்களுக்கு பயன்படும் என்பதற்காக காயத்தை சந்தித்தாலும் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்து கேப்டன் பாபர் அசாம் தங்கள் அணியுடன் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் இரு அணி வீரர்களும் துபாயில் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் இவர்கள் பயிற்சிக்கு செல்லும்போதும் முடித்து விட்டு திரும்பும் போதும் ஒருவருக்கு ஒருவரை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தங்களது பயிற்சியை துவங்க மைதானத்துக்கு சென்ற இந்திய வீரர்கள் காயத்தால் அமர்ந்திருந்த சாஹீன் அப்ரிடியை பார்த்து எதிரணி என்பதையும் மறந்து நலம் விசாரித்தார்கள்.
குறிப்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் சாஹால் சிரித்த முகத்துடன் ஒருசில நிமிடங்கள் ஜாலியாக பேசி அவருடைய காயத்தின் நிலைமை பற்றி கேட்டறிந்தார். அடுத்ததாக விராட் கோலியும் அவருடன் கை கொடுத்து காயத்தை பற்றி கேட்டறிந்ததுடன் அதிலிருந்து விரைவில் குணமடைய சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும் நீங்கள் (விராட் கோலி) விரைவில் பார்முக்கு திரும்பி ரன்கள் அடிக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக சாஹீன் அப்ரிடி கூறினார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் வாழ்வில் இதெல்லாம் சகஜம் என்பதால் சீக்கிரம் குணமடைந்து விடுவீர்கள் என்று ரிஷப் பண்ட் நலம் விசாரித்தார்.
இறுதியாக காயத்திலிருந்து குணமடைந்தது சமீபத்தில் அணியில் இணைந்துள்ள கேஎல் ராகுல் மிகவும் தீவிரமாக அவரது காயத்தை பற்றி கேட்டறிந்தார். இப்படி பரம எதிரிகள் என்பதையும் தாண்டி நல்ல மனம் கொண்ட மனிதர்களாக, காயத்தின் வலியை பற்றி தெரிந்த கிரிக்கெட் வீரர்களாக ஷாஹீன் அப்ரிடியிடம் இந்திய வீரர்கள் முழு அன்பை வெளிப்படுத்தி பாசத்துடன் நலம் விசாரித்ததை பார்த்த பாகிஸ்தான் மனமுருகி சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
இவர்கள் சந்தித்து பேசும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stars align ahead of the #AsiaCup2022 🤩
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2022
A high-profile meet and greet on the sidelines 👏 pic.twitter.com/c5vsNCi6xw