இந்திய அணி தற்போது நடைபெற்றுவரும் T20 உலகக்கோப்பையில் ஜிம்பாபே அணியுடன் தனது கடைசி ஆட்டத்தை ஆடவுள்ளது.அந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும்.எனவே முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்திய அணி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் நட்சத்திர வீரர் ஹர்ஷல் பட்டேல் கம்பேக் தரப்படவுள்ளார். இந்த தொடரில் தற்போது வரை ஹர்ஷல் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. டெத் ஓவர்களில் அதிக ரன் கொடுப்பதால் ஷமி, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே கூட்டணி அமைத்து வருகின்றனர்.

ஆனால் இவர்களில் யாரையும் நீக்காமல், ஹர்ஷல் பட்டேலை உள்ளே கொண்டு வரவுள்ளனர்.ஸ்பின்னர் அக்சர் படேல் அல்லது ரவி அஸ்வின் வெளியேறப்போவதாக தகவல்கள் வருகின்றன