டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கூட செல்லாமல் வெளியேறியது. அரையிறுதிபோட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து விசாரணை செய்ய பிசிசிஐ ஆலோசனைக்கூட்டம் நடத்தவுள்ளது.
இதில் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளையும் தர மதிப்பீடு செய்து பவ்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது புது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இனி இந்தியாவின் 50 ஓவர் கிரிக்கெட் அணி மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு தனி தனியாக கேப்டன்களை நியமிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி 50 ஓவர் அணிக்கு ரோகித் சர்மாவும், டி20 கிரிக்கெட் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.இந்த திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது