இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி T20 போட்டி இன்று இந்தூரில் நடக்கவுள்ளது.இந்நிலையில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளதால் இப்போட்டியில் நிறையே மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்தூரில் நடைபெறவுள்ள கடைசி டி20 போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு பதில் ஷ்ரேயஸ் ஐயர், சிராஜ் ஆகியோர் களமிறங்குவார்கள் எனக் கருதப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கே.எல்.ராகுல் இல்லை என்பதால் ரிஷப் பந்த் ரோஹித் ஷர்மாவுடன் ஓபனராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது .