Skygain News

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு…அணியில் பல மாற்றங்கள்..!

இந்திய அணி அடுத்ததாக தென்னாபிரிக்கா அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றது. ஆனால் T20 உலகக்கோப்பைக்காக இந்திய அணி ஆஸ்திரேலியா செல்ல இருப்பதால் ஒருநாள் தொடருக்காக ஒரு புதிய அணியை தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.

இத்தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், ஷிகர் தவான் கேப்டனாகவும், ஷ்ரேயஸ் ஐயர் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ருதுராஜ் கெய்க்வாட், ராஜத் பட்டீதர், ஷாபாஸ் அகமது, முகேஷ் குமார், ராகுல் திரிபாதி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இந்த 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியை காத்திருக்கின்றனர். இவர்களுடன் சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More