அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி அனைவரும் எதிர்பார்த்த அணியே தான் தேர்வாகியுள்ளது.
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அஸ்வின், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங். இதில் மிக்கமுக்கியமான வீரரான ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
எனவே சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக அக்ஷர் பட்டேல் கொண்டு வரப்பட்டுள்ளார். இவருடன் அனுபவ வீரர்களான யுவேந்திர சாஹல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என மொத்தமாக 3 ஸ்பின்னர்கள் மட்டுமே களமிறங்கியுள்ளனர்.
One title 🏆
— BCCI (@BCCI) September 12, 2022
One goal 🎯
Our squad 💪🏻#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/Dw9fWinHYQ
தீபக் ஹூடா 4வது ஸ்பின்னராக அவ்வபோது உதவலாம்.இந்நிலையில் இந்திய அணியில் குழப்பமாக இருந்தது விக்கெட் கீப்பராக யாரை தேர்வு செய்வது என்பதுதான். ஆசிய கோப்பையில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நிறைய குழப்பங்கள் இருந்த நிலையில் மீண்டும் அவர்கள் இருவரையுமே அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ.