ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்த அணி முதல் இடத்திலும், இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.தற்போது இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி 112 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 114 புள்ளிகளும் இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக உள்ளது.

அதாவது நியூசிலாந்துக்கு எதிரான தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால் இந்திய அணி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். ஒருவேலை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றால் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.