இந்தியா மற்றும் நெஸிலண் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான பார்ட்னர்ஷிப்களால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது.கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே ஆச்சரியம் தந்தனர் இந்தியாவின் இளம் பவுலர்கள்.
ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் 22 ரன்களுக்கு வெளியேறினார். அறிமுக வீரர் உம்ரான் மாலிக்கின் வேகத்தில் சிக்கி டெவோன் கான்வே (24) மற்றும் டேரில் மிட்செல் (11) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனால் இந்தியா வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அத்தனையும் பொய்யானது. 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் – டாம் லாதம் ஜோடி இந்தியாவுக்கு ஆட்டம் காட்டினர். இந்திய பவுலர்கள் எவ்வளவு முயன்றும் கடைசி வரை அவர்களை பிரிக்கவே முடியவில்லை.
That's that from the 1st ODI.
— BCCI (@BCCI) November 25, 2022
New Zealand win by 7 wickets, lead the series 1-0.
Scorecard – https://t.co/JLodolycUc #NZvIND pic.twitter.com/HEtWL04inV
சிறப்பாக ஆடிய டாம் லாதம் 104 பந்துகளில் 145 ரன்களை விளாசினார். மறுபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் 98 பந்துகளில் 94 ரன்களை குவித்தார்.இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பால் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது