சமீபத்தில் ஐ.சி.சி வெளியிட்டுள்ள அணிகளுக்காக T20 தரவிசையில் இந்திய அணி முதலிடத்தை பெற்றுள்ளது. சிலநாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தை காட்டிலும் 7 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் இடம் பிடித்தது இந்தியா.இந்நிலையில் இந்திய அணி (268 புள்ளிகள்) ஒரு புள்ளி அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது.அத்துடன் 2-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை (261 புள்ளி) விட 7 புள்ளிகள் முன்னிலை கண்டுள்ளது.
The NO.1️⃣ T20I team retain their spot in the latest ICC Men's T20I rankings 🤩🔝#India #TeamIndia #ICCRankings #CricketTwitter pic.twitter.com/diK3ndJkoV
— Sportskeeda (@Sportskeeda) September 26, 2022
தென்ஆப்பிரிக்கா (258 புள்ளி) 3-வது இடத்திலும், பாகிஸ்தான் (258 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்து (252 புள்ளி) 5-வது இடத்திலும் தொடருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி தென்னாப்ரிக்காவுடன் T20 போட்டிகளில் விளையாட இருக்கின்றது